மீண்டும் விநியோகஸ்தர் சங்க தலைவர் ஆனார் கே.ராஜன்
ADDED : 433 days ago
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த வகையில் 2024 - 2026ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. ஓட்டளிக்க உரிமையுள்ள 467 பேரில் 327 பேர் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் தற்போதைய தலைவரான கே ராஜன் மீண்டும் வெற்றி பெற்றார். செயலாளராக கலைப்புலி சேகரன், துணைத் தலைவராக அந்தோணி தாஸ், பொருளாளராக தருண்குமார், துணை செயலாளராக நந்தகோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 16 பேர் செயற்குழு உறுப்பினர் ஆனார்கள்.