மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
393 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
393 days ago
அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 600 கோடிக்கு மேல் அப்படம் வசூலித்த நிலையில், அதையடுத்து ஞானவேல் இயக்கி உள்ள வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இந்த படத்தை அடுத்து மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர்- 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து நெல்சன் கூறுகையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அப்படத்தின் கதை திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதைவைத்து பார்க்கையில் தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
393 days ago
393 days ago