மேலும் செய்திகள்
வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்
368 days ago
பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன்
368 days ago
நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
368 days ago
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இதனை சமாளிக்க முடியாமல் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள்.
இதனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகை பார்வதி 'மலையாள நடிகர்கள் கோழைகள்' என்று விமர்சித்தார். இந்த நிலையில் நடிகை பத்மப்பரியா 'மலையாள நடிகர்களுக்கு முதுகெலும்பில்லை' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஹேமா கமிட்டி அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்? யாருக்காக வெளியிடாமல் மவுனம் காக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பாலியல் விவகாரத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் கிடையாது. அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு உள்ளனர்.
மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது. யார் மறுத்தாலும் அதுதான் உண்மை. தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக யாரும் வாயைத் திறக்க மறுக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தை ஒரு பாலியல் பிரச்சினையாக மட்டுமே சினிமா துறையினர், பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் அனைவரும் ஒரு வியாபார பொருள் மட்டுமே. எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் திடீரென குறைந்து விட்டது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பத்மப்ரியா தமிழில் தவமாய் தவமிகுந்து, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். திருமணமாகி செட்டிலானவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.
368 days ago
368 days ago
368 days ago