ஹீரோயின் ஆன நிகிலா சங்கர்
ADDED : 401 days ago
இஸ்ரேலில் பட்டம் படித்து விட்டு திரும்பிய சென்னை பொண்ணு நிகிலா சங்கர். யூ டியூபில் நடிப்பு பயணத்தை தொடங்கியவர் அதன்பிறகு குறும்படங்களில் நடித்தார். தொடர்ந்து குட்நைட், லவ்வர் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 'டோபமைன் @ 2.22' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
திரவ் எழுதி இயக்கி நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் டியூக், 'குற்றம் கடிதல்' சத்யா, விபிதா, சதீஷ், சாம்சன், 'நூடுல்ஸ்' சக்திவேலன் நடித்துள்ளனர். பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆலன் ஷோஜி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து திரவ் கூறுகையில், “இக்கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த 7 பேரைச் சுற்றி நகர்கிறது. அவர்களின் வாழ்க்கை நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படும்போது, அவர்களின் உணர்வுகள் ஒரு விஷயத்துக்கு அடிமையாகுதல் பற்றிய கதையாக நடக்கிறது” என்றார்.