சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்'
ADDED : 483 days ago
தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ள படம் ‛தி லாஸ்ட் ஒன்'. திகில் மற்றும் பேன்டசி திரைப்படமான இதில், நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். சிம்ரனின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் இவர் நடித்த 'குல்மோஹர்', 'ராக்கெட்ரி' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு தேசிய விருதுகளையும் வென்றன. தமிழில் அவரது சமீபத்திய படமான 'அந்தகன்' படத்தின் சிம்ரனின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அந்த வகையில் தி லாஸ்ட் ஒன் படத்திலும் அவரது நடிப்பு பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.