உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேட்டையன், தேவரா 1 - அனிருத்திற்கு அடுத்தடுத்து அப்டேட்ஸ்

வேட்டையன், தேவரா 1 - அனிருத்திற்கு அடுத்தடுத்து அப்டேட்ஸ்


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்திற்கும், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'தேவரா 1' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

'வேட்டையன்' படத்தின் முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் நாளை செப்டம்பர் 9ம் தேதியும், 'தேவரா 1' படத்தின் டிரைலர் நாளை மறுதினம் செப்டம்பர் 10ம் தேதியும் வெளியாக உள்ளது.

தமிழில் ஒரு பாடல், தெலுங்கில் ஒரு டிரைலர் என அனிருத்தின் இசை டிஜிட்டல் தளங்களில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. இரண்டுமே எவ்வளவு பார்வைகளைப் பெறப் போகிறது, ஏதாவது புதிய சாதனையைப் படைக்குமா என அனிருத்தின் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !