துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரவி தேஜா பட நடிகை
ADDED : 405 days ago
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள மொழி படங்களைக் கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரித்து கதாநாயகனாக 'காந்தா' என்கிற படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக மிஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கின்றார். இதனை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ஹன்ட் ஆப் வீரப்பன் என்ற வெப் தொடரின் கதையாசிரியராக பணியாற்றினார். இந்த படத்தின் பூஜை நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.