உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் நஸ்ரியாவின் வெப் தொடர்

தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் நஸ்ரியாவின் வெப் தொடர்

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார் நஸ்ரியா. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சாந்தனு, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார். 1940 காலகட்ட பின்னனியில் இந்த கதைகளம் நடைபெறுகிறது. உண்மை கதையான லஷ்மி காந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !