உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா?

'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா?

கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவரா' படத்தின் முதல் பாக டிரைலர் நேற்று வெளியானது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தின் டிரைலர் உருவாகியுள்ளது. தெலுங்கு சினிமாவுக்கே உரிய மசாலா பாணியில் இந்தப் படம் உருவாகியிருக்குமோ என்ற சந்தேகம் படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது வருகிறது.

இதற்கு முன்பு வெளியான 'கேஜிஎப், சலார், புலி' உள்ளிட்ட சில படங்களின் சாயல் படத்தின் டிரைலரில் தெரிகிறது. டிரைலர் கூட 'கேஜிஎப்' ஸ்டைலில் பிரகாஷ் ராஜ் பின்னணிக் குரலில் கதை சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடத்திற்குள்ளான டிரைலரிலேயே அவ்வளவு வன்முறை காட்சிகள் உள்ளன.

பான் இந்தியா வரவேற்புக்கான டிரைலராக இல்லாமல் தெலுங்கு ரசிகர்களுக்கான ஒரு படமாகவே இந்தப் படத்தின் டிரைலர் இருக்கிறது என்பது பலரது கமெண்ட்டாக உள்ளது.

யு டியுபில் ஐந்து மொழியில் வெளியான டிரைலருக்கு தமிழில் மட்டுமே குறைவான பார்வைகள் கிடைத்துள்ளது. இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !