உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர்-ல் உருவான நட்பை தேவராவிலும் தொடரும் ஆலியா பட்

ஆர்ஆர்ஆர்-ல் உருவான நட்பை தேவராவிலும் தொடரும் ஆலியா பட்

சமீப வருடங்களாகவே பாலிவுட் நடிகைகள் பலரும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடித்திருந்தார். விரைவில் வெளியாக இருக்கும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.. இந்த படம் ஹிந்தியில் ஜிக்ரா என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.. இந்த நிலையில் தேவரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை ஆலியா பட்டும் கலந்து கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் ஆலியா பட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது போன்று செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த படம் ஹிந்தியில் வெளியாக இருப்பதால் இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதேவியின் மகள் நடிக்கும் படம் என்பதாலும் ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஆலியா பட் இணைந்து நடித்த அந்த நட்பின் அடிப்படையிலும் தேவரா படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறாராம் ஆலியா பட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !