கேங்கர்ஸ் : மீண்டும் இணைந்த வடிவேலு - சுந்தர்.சி
ADDED : 390 days ago
சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு பிரசாந்த், கிரண், வடிவேலு நடித்து திரைக்கு வந்த படம் வின்னர். இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த கைப்புள்ள என்ற வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு சுந்தர்.சி இயக்கிய கிரி, ரெண்டு, லண்டன் மற்றும் அவர் ஹீரோவாக நடித்த தலைநகரம் உட்பட பல படங்களில் நடித்தார் வடிவேலு. இவர்களின் காமெடி கூட்டணி படத்தின் வெற்றிக்கும் பக்கபலமாய் இருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு படத்தில் வடிவேலு, சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளார்கள். கேங்கர்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தில் சுந்தர்.சி மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் போஸ்டர் வெளியாகி உள்ளது.