பிளாஷ்பேக் : நான்கு காலகட்டங்களில் ரீமேக்கான படம்
ADDED : 406 days ago
1977ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் 'யமகோலா'. என்டி ராமராவ் நடித்த இந்த படம், எமனுக்கும் மனிதனுக்குமான விவாதத்தை மையமாகக் கொண்டது. சித்ரகுப்தர்களால் தவறுதலாக மரணமடையச் செய்து கொண்டு செல்லப்பட்ட மனிதன், எமனோடு விவாதம் செய்து பூமிக்கு அழைத்து வருவதுதான் கதை.
பெரும் வரவேற்பு பெற்ற இந்த படம் ஹிந்தியில் லோக் பர்லோக் என்ற பெயரில் 1979ம் ஆண்டு வெளியானது. தமிழில் யமனுக்கு யமன் என்ற பெயரில் 1980 ஆம் ஆண்டு தமிழில் வெளியானது. சிவாஜி, ஸ்ரீபிரியா நடித்திருந்தனர், யோக்நாத் இயக்கியிருந்தார். பின்னர் 2007ம் ஆண்டு எமதுங்கா என்ற தெலுங்கில் பெயரில் ரீமேக் ஆனது. இதனை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி இருந்தார். ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். இப்போது ரீமிக்ஸ் செய்யப்பட்டாலும் ரசிக்கும் படியான திரைக்கதையை கொண்டது இந்தப் படம்.