உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தரும் நந்திதா தாஸ்

மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தரும் நந்திதா தாஸ்

நடிகை நந்திதா தாஸ் இதுவரை 10க்கும் மேற்பட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தவர். தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தருகிறார் நந்திதா தாஸ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நந்திதா தாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், சுஜித் ஷங்கர், ஜோஜூ ஜார்ஜ் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !