சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள்
ADDED : 397 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீ நான் காதல்' என்கிற புதிய தொடரில் அனு என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பின் இவர் என்ட்ரி கொடுத்த தொடர் என்பதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது அவர் சீரியலை விட்டு திடீரென விலகியிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அனு கதாபாத்திரத்தில் இனி அஷ்ரிதா நடிக்க இருக்கிறார்.