கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்
ADDED : 395 days ago
மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. தொடர்ந்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து இவர் 'மஹா சமுத்திரம்' படத்தில் நடித்த போது நடிகர் சித்தார்த் உடன் காதல் வயப்பட்டார். இருவரும் காதலர்களாக வலம் வந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்நிலையில் இவர்களின் திருமணம் சத்தமின்றி ஐதராபாத்தில் உள்ள அதிதிக்கு சொந்தமான வனர்பதி கோயிலில் நடந்துள்ளது. மிகவும் எளிமையாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க இவர்களின் திருமணம் நடந்தது.
திருமண போட்டோக்களை பகிர்ந்து, ‛‛நீ தான் எனது சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்களும் நீ தான்... என்னுள் பாதி நீ'' என கவிதையாக உருகி பதிவிட்டுள்ளார் அதிதி ராவ்.