உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல்

வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல்


மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பொன்வேல், ராகுல் நடித்து வெளியான படம் 'வாழை'. ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வந்தது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 40 கோடி வரை வசூலித்திருக்கிறது. இந்நிலையில் வாழை படத்தின் 25வது நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது.

அப்போது மாரி செல்வராஜ் பேசும்போது, ''என்னைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாழை படத்தை எடுத்தேன். அடுத்து வாழை இரண்டாவது பாகம் மட்டுமின்றி பல பாகங்களை எடுப்பேன். குறிப்பாக வாழை படத்தின் சிவநந்தன் என்ற வேடத்தில் நடித்த பொன்வேல் கேரக்டர் இரண்டாம் பாகத்திலும் தொடரும்,'' என்கிறார் மாரி செல்வராஜ்.

மேலும் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். அதையடுத்து வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !