உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சிங்கிளாக இருப்பது போர் ': விவாகரத்தை கொண்டாடிய ஷாலு புலம்பல்

'சிங்கிளாக இருப்பது போர் ': விவாகரத்தை கொண்டாடிய ஷாலு புலம்பல்


பிரபல சீரியல் நடிகை ஷாலினி ஜீ தமிழில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'சூப்பர் மாம்' உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்ததை போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடிய ஷாலினி, சிங்கிளாக சுதந்திரமாக இருப்பதை பெரிதும் விரும்புவதாக பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

ஆனால், சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தனக்காகவும், தன் குழந்தைக்காகவும் நிச்சயம் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது சிங்கிளாக இருப்பது தனிப்பட்ட முறையிலும், அலுவல் ரீதியிலும் சோர்வடைய செய்வதாக பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !