பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம்
ADDED : 422 days ago
தமிழ் சினிமாவில் அபூர்வமாக சில விஷயங்கள் நடக்கும். அப்படியானவற்றில் ஒன்று அண்ணனும், தங்கையும் ஜோடியாக நடித்த படம். 1934ம் ஆண்டு வெளிவந்த 'சீதா கல்யாணம்' என்ற படத்தில் ராமராக அண்ணன் ராஜமும், சீதையாக அவரது தங்கை ஜெயலட்சுமியும் நடித்தனர். இதற்கு முன் அவர்கள் நாடகத்தில் அவ்வாறே நடித்து வந்தனர். ஆனால் சினிமாவில் நடித்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை பாபுராவ் பெண்டர்கர் என்ற வங்க மொழி இயக்குனர் இயக்கினார். ராஜம், ஜெயலட்சுமியுடன் வி.சுந்தரம் அய்யர், கமலா, எஸ்.பாலச்சந்தர், சீதாராம அய்யர் உள்பட பலர் நடித்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். ரமோத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.