உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


சின்னத்திரையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது மணிமேகலை - பிரியங்கா பஞ்சாயத்து. மணிமேகலை, பிரியங்கா குறித்து பதிவிட்ட முதல் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்த பலர் தற்போது மணிமேகலைக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா, மணிமேகலை மீது தான் தவறு என்று கூறியுள்ளார். மேலும், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததையும் மணிமேகலை காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்ததையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க, ஷகிலாவின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !