கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகின்றார். தற்போது சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர சத்தமின்றி புதிய வெப் தொடர் ஒன்றை தனது தயாரிப்பில் எடுத்து வருகிறார்.
அசோக் வீரப்பன், பரத் முரளிதரன், கமலா என மூவரும் இணைந்து இந்த தொடரை இயக்குகின்றனர். திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த வெப் தொடருக்கு 'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகனாக தெலுங்கு பட நடிகர் நவீன் சந்திரா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின் ‛பட்டாஸ்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நந்தா, மனோஜ் பாரதிராஜா மற்றும் முத்துக்குமார் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் இந்த வெப் தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.