மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
348 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
348 days ago
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கின்றார். மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. நேற்று (செப்.,21) நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம் ‛‛துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு?'' எனக் கேட்ட கேள்விக்கு, ‛‛துப்பாக்கி கனமா தான் இருக்கும். அதை கரெக்ட்டா ஹேண்டில் பண்ணனும். முடிந்தளவு சிரத்தை எடுத்து பண்ணிருக்கோம்னு நினைக்கிறேன். அதைத்தாண்டி எங்களுக்கு அந்த தைரியத்தை மொத்தமா கொடுக்க கமல்ஹாசன் இருக்கிறார்,'' என பதிலளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான ‛தி கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து, வில்லனை பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச்செல்வார். அப்போது சிவகார்த்திகேயன், ‛நீங்கள் முக்கியமான வேலையாக போகிறீர்கள். நீங்கள் போங்கள், நான் இதனை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்' எனப் பேசியிருப்பார்.
இதனை அவரது ரசிகர்கள், விஜய் விரைவில் படங்களுக்கு முழுக்குப்போட்டு முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் அவரது வெற்றிடத்தை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்து சென்றதை குறிப்பதாக சிலாகித்தனர். அதனை மனதில் வைத்தும், அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள சிவகார்த்திகேயன் துப்பாக்கியுடன் பல காட்சிகளில் நடித்துள்ளதையும் வைத்து இப்படியான கேள்வியை தொகுப்பாளர் கேட்டதும் அரங்கத்தில் உள்ளவர்கள் ஆர்பரித்தனர்.
348 days ago
348 days ago