உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய வெப் தொடரில் சமந்தா

புதிய வெப் தொடரில் சமந்தா


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கிய ‛சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‛ரக்த் பிரம்மாண்ட்' என்ற புதிய வெப் தொடரில் களமிறங்குகிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'தும்பத்' படத்தை இயக்கிய ராஹி அனில் பார்வே இயக்குகிறார். ஆதித்யா ராய் கபூர் மற்றும் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த வெப் தொடரின் படப்பிடிப்பை துவங்கியது குறித்து சமந்தா இன்ஸ்டாவில், ‛கனவு காண்பதை நிறுத்தாதீர்கள், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்புக்கு வந்ததில் மகிழ்ச்சி,' எனப் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !