உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம்

ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம்


ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். ரஜினியின் 170வது படமான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று முன்தினம் இப்படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்ற போது, வேட்டையனில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் சினிமாவில் ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து அதன் பிறகு முக்கிய இடத்துக்கு வந்தார் என்பது குறித்த தகவலை தெரிவித்தார் ரஜினி .

இந்த நிலையில் தற்போது ரஜினியை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் அமிதாப்பச்சன். அதில், ஹிந்தியில் ‛ஹம்' என்ற படத்தில் எனது தம்பியாக ரஜினி நடித்தார். அந்த படத்தில் நடித்து வந்தபோது செட்டில் தரையில்தான் அவர் படுப்பார். அவரது எளிமை எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த குணத்துக்காகதான் இன்று வரை சினிமாவில் அவர் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்று அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார் அமிதாப்பச்சன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !