உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் ரூ.600 கோடி வசூலைக் கடந்த 'ஸ்திரீ 2'

ஹிந்தியில் ரூ.600 கோடி வசூலைக் கடந்த 'ஸ்திரீ 2'

ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் 'ஸ்திரீ 2'. இப்படம் ஆச்சரியப்படும் விதத்தில் அதிகமான வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் ஹிந்தி வட்டார பாக்ஸ் ஆபீஸில் இப்படம் 600 கோடி நிகர வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்திய அளவிலான அனைத்து மொழிகளும் சேர்ந்த பாக்ஸ் ஆபீஸில் ஷாரூக்கானின் 'ஜவான்' படம் 643 கோடியை வசூலித்துள்ளது. இருந்தாலும் ஹிந்தி மார்க்கெட்டில் 'ஜவான்' படம் படைக்காத சாதனையை 'ஸ்திரீ 2' படம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை இந்தப் படம் 840 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவிலான வசூல் பட்டியில் சாதனை புரிந்த படங்களின் வரிசையில் தற்போது 10வது இடத்தை இப்படம் பிடித்துள்ளது. 900 கோடி வசூலைக் கடந்தால் 8வது இடத்தில் இருக்கும் 'அனிமல்' படத்தின் இடத்தை இப்படம் கடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !