மனைவி ஆர்த்தி மீது, ஜெயம் ரவி போலீசில் புகார்
ADDED : 391 days ago
இந்த நிலையில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அடையாறு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் அவர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் கடற்கரை சாலையில் உள்ள தனது மனைவி வீட்டில் இருந்து தனக்கு சொந்தமான உடமைகளை மீட்டுத்தர வேண்டும் “என்று கூறப்பட்டுள்ளது.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.