காம்பவுண்ட் சுவர் விவகாரம்: பக்கத்து வீட்டுக்காரருடன் திரிஷா சமரசம்
ADDED : 460 days ago
நடிகை திரிஷா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செனடாப் ரோடு இரண்டாவது தெருவில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டு காம்பவுண்டு சுவர் தொடர்பாக திரிஷாவுக்கும் பக்கத்து வீட்டுக்காருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திரிஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை திரிஷா தரப்பிலும், எதிர் தரப்பிலும் பிரச்னை இரு தரப்பிலும் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் நடித்த திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.