இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா
ADDED : 378 days ago
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ‛முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, 100, ஈட்டி, இமைக்கா நொடிகள், கணிதன்' உள்ளிட்ட பல தமிழ் படங்கள் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது இவரின் கைவசமாக ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் மூன்று, அட்ரஸ், டி.என்.ஏ போன்ற படங்கள் உள்ளன.
நடிப்பை தாண்டி அதர்வாவுக்கு இயக்குனர் ஆசையும் உண்டாம். விரைவில் அவர் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.