உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛அமரன்' படத்தின் ‛ஹாய் மின்னலே...' பாடல் எப்போது ரிலீஸ்?

‛அமரன்' படத்தின் ‛ஹாய் மின்னலே...' பாடல் எப்போது ரிலீஸ்?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த ஒரு தகவலை இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அமரன் படத்தின் ஹாய் மின்னலே என்ற பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாகிறது. இந்தப் பாடல் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ரொமான்டிக் பாடல் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !