மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
347 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
347 days ago
கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கி திரைக்கு வந்த படம் 96. காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு, விஜய் சேதுபதி - திரிஷாவின் கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் பிரேம்குமார். இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம்குமாரிடம் ‛96' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‛‛96 படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட கதையில் உருவானது. ஆனால் அப்படத்தின் இரண்டாம் பாகம் காதல் இல்லாமல் குடும்ப பிரச்னைகளை மையமாகக் கொண்ட உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
347 days ago
347 days ago