உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேட்டையன் படத்திற்கு யு/ஏ சான்று?

வேட்டையன் படத்திற்கு யு/ஏ சான்று?

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். என்கவுன்டர் தொடர்பான கதையில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. ரஜினி போலீஸ் எஸ்பி.,யாக நடித்திருக்கிறார். சமீபத்தில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் வருகின்ற அக். 10ந் தேதி வெளியாவதால் இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தில் என்கவுன்டர் போன்ற ஆக்ஷன் தொடர்பான வன்முறை காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !