'கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம்': அமரன் படத்தின் சாய் பல்லவி அறிமுக வீடியோ வெளியீடு
ADDED : 392 days ago
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கின்றார். மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த நிலையில், சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் 'இந்து ரெபேக்கா வர்கீஸ்' என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.