அக். 4ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'கடைசி உலகப்போர்'
ADDED : 457 days ago
மீசையை முறுக்கு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக 'கடைசி உலகப்போர்' எனும் படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி, நடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இதில் கதாநாயகியாக அனகா நடித்துள்ளார். நட்டி நட்ராஜ், கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
போர் கதைகளத்தை மையப்படுத்தி பிரமாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் கடந்த வாரத்தில் தமிழில் வெளியாகி விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தி மொழியில் டப்பிங் செய்துள்ளனர். வருகின்ற அக்டோபர் 4ம் தேதி இதன் ஹிந்தி பதிப்பு 'லாஸ்ட் வேர்ல்ட் வார்' எனும் தலைப்பில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.