அனிரூத், ஸ்ரீலீலா கூட்டணியில் ஆல்பம் பாடல்
ADDED : 378 days ago
இசையமைப்பாளர் அனிரூத் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்களின் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இது அல்லாமல் வெளிநாடுகளில் உள்ள பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அனிருத் ஒரு ஆல்பம் பாடல் ஒன்று இசையமைத்து பாடுகிறார். இந்த பாடலில் அவருடன் இணைந்து நடனம் ஆட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள இவர் இன்னும் தமிழில் அறிமுகமாகவில்லை. அதேசமயம் அவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. விரைவில் ஒரு தமிழ் படத்தில் அவர் அறிமுகமாக உள்ளார்.