மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
338 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
338 days ago
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் லப்பர் பந்து. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருந்தார். சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினையும் பெற்று இந்த படம் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், அடுத்தபடியாக தனுஷை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து. அந்த கதையில் நடிப்பதற்கு தனுஷ் சம்மதம் தெரிவித்துவிட்டபோதும், தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வரும் அவர், குபேரா மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படங்களில் அடுத்தடுத்து நடிப்பதால் உடனடியாக கால்ஷீட் தர இயலாது என்று தெரிவித்துவிட்டாராம். அதன் காரணமாகவே தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்து வரும் துருவ் விக்ரமை சந்தித்து இன்னொரு கதை சொல்லி இருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து. பைசன் படத்தை முடித்த பிறகு துருவ்வை வைத்து தனது அடுத்த படத்தை இவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
338 days ago
338 days ago