மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
338 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
338 days ago
கடந்த 2020ம் ஆண்டில் தெலுங்கில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஹிட் - தி பர்ஸ்ட் கேஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022ல் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக ஹிட் - தி செகண்ட் கேஸ் வெளியாகி மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்த படத்தின் இறுதியில் நடிகர் நானி மூன்றாம் பாகத்திற்கான லீட் காட்சியில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி நடிப்பில் 'ஹிட் - தி தெர்ட் கேஸ்' படம் உருவாகிறது என்றும், இப்படம் 2025ம் ஆண்டு மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது எனவும் அறிவித்தனர்.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கதாநாயகியாக நடிக்க கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
338 days ago
338 days ago