மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
340 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
340 days ago
அறிமுக இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'மஹாராஜா . விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, அபிராமி, நட்ராஜ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். தியேட்டர்களில் 50 நாட்கள் வரை ஓடிய இந்த படம் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. ஹிந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இந்த படத்தை ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி தயாரிப்பு தரப்பு நெட்பிளிக்ஸ் தளத்திற்கு 17 கோடிக்கு கொடுத்தது. தியேட்டரை விட இந்த படம் ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தாண்டு ஓடிடியில் வெளியான தமிழ் படங்களில் மகாராஜா 25 மில்லியன் பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்தது. இதன் மூலம் 150 கோடி வரை நெட்பிளிக்சிற்கு லாபம் ஈட்டி கொடுத்திருப்பதாக சினிமா வியாபார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆனாலும் நெட்பிளிக்ஸ் படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டிருப்பதால் ஹிந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் படத்தை பார்த்ததே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
340 days ago
340 days ago