சாதி, மதம் மனிதனை வெறுக்க செய்யும்... பயணமே சிறந்த கல்வி - அஜித் அட்வைஸ்
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சினிமாவை தாண்டி பைக் பயணம், கார் ரேஸில் ஆர்வம் உடையவர். பைக்கில் உலகை சுற்றி வருவது அஜித்தின் விருப்பமான ஒன்று. சில மாதங்களுக்கு முன் பைக்கில் இந்தியாவை சுற்றி வந்தார்.
அந்த சமயத்தில் அஜித் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‛‛அதிகம் பயணம் செய்யுங்கள், பயணத்தை விட சிறந்த கல்வி இருக்க முடியாது. சாதி, மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும். நாம் சந்திக்காதவர்களை கூட சந்தேகப்பட வைக்கும். ஆனால் பயணங்கள் வெவ்வேறு நாடுகளையும், மதங்களையும் சேர்ந்தவர்களுடன் பழகி அவர்களின் கலாசாரத்தை உணர வைக்கும். அதை அனுபவிக்கும்போது உங்களை கனிவானவாக மாற்றும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் அன்பை பொழியச் செய்யும். பயணங்கள் உங்களை மென்மேலும் சிறந்த மனிதனாக மாற்றும்'' என்றார்.