ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகும் ராஜேஷ்.எம்
ADDED : 376 days ago
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் பிரதர் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ராஜேஷ்.எம். இந்த படம் வருகிற தீபாவளி தினத்தில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக 2009ம் ஆண்டு ஜீவா நடிப்பில் தான் முதல்முறையாக இயக்கிய சிவா மனசுல சக்தி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குவதற்கு தயாராகி வருகிறார் ராஜேஷ். எம். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை எழுதி முடித்து விட்டார். மேலும் , சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் யோகி பாபுவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ராஜேஷ். எம் .