விஜய்யுடன் இணைந்து நடிக்கும் மோனிஷா
ADDED : 373 days ago
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானவர் மோனிஷா ப்ளெஸ்ஸி. தற்போது மற்றொரு குக்கிங் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். சினிமாவில் மாவீரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த மோனிஷாவிற்கு தற்போது விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனையொட்டி விஜய்யை சந்தித்த மோனிஷா அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.