கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ!
ADDED : 735 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யா உடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இப்படம் வருகின்ற நவம்பர் 14ம் தேதி அன்று வெளியாகிறது. இதற்கான இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற அக்டோபர் 20ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.