‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட்
ADDED : 375 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமான ஹன்சிகா, அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று (அக்.,6) மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், ஹோட்டலுக்கு சென்று மதுரை உணவுகளை ரசித்து சாப்பிட்டார்.
மதுரை விசிட் குறித்து ஹன்சிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், ‛‛மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு'' எனத் தமிழில் பதிவு செய்துள்ளார்.