கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்'
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இவர் நடித்த ‛டிமான்ட்டி காலனி - 2' படம் வெற்றிப்பெற்றது. அதில் இவரது நடிப்பும் பேசப்பட்டது. அடுத்ததாக ஜீவா உடன் இவர் நடித்த ‛பிளாக்' திரைப்படம் வரும் 11ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‛‛சினிமாவில் என் உடலை விற்பனைப் பொருளாக விற்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. என் உடலைக் கவர்ச்சியாகக் காட்டி வணிகம் செய்ய மாட்டேன். திரும்பிப் பார்க்கும்போது தவறான விஷயத்தைக் கொடுத்துவிட்டோமோ என நினைக்கக் கூடாது. எதிர்மறைக் கதாபாத்திரம் வந்தாலும் மறுக்காமல் நடிக்கத் தயார். இது சினிமா, அவ்வளவுதான். ஆனால், பேஷன் என்கிற பெயரில் கவர்ச்சியாக உடலைக் காட்டக்கூடாது என உறுதியாக இருக்கிறேன்,'' எனக் கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.