கிடப்பில் போட்ட தயாரிப்பாளர்; அதிர்ச்சியில் பிரமாண்ட இயக்குனர்
ADDED : 362 days ago
உலக நடிகரை வைத்து, லஞ்சத்துக்கு எதிரான அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டார், பிரமாண்ட இயக்குனர். ஆனால், அப்படம் படுதோல்வி அடைந்து விட்டது. இருப்பினும், அதே படத்தின், மூன்றாம் பாகத்திற்கான அதிகப்படியான காட்சிகளை ஏற்கனவே படமாக்கி விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை படமாக்க வேண்டும் என, தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
ஆனால், இரண்டாம் பாகத்தை, 300 கோடி ரூபாய் வாரி இறைத்து தயாரித்து, 150 கோடி கூட கைசேரவில்லை. அதனால், மூன்றாம் பாகத்தின் மீது நம்பிக்கை வைத்து, மேலும், 300 கோடி ரூபாயை வாரி இறைக்க நாங்கள் தயாராக இல்லை என, கிடப்பில் போட்டு விட்டது, தயாரிப்பு நிறுவனம். இதையடுத்து, உலக நடிகரும், பிரமாண்ட இயக்குனரும் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.