‛தெறி' பட ஹீந்தி ரீ-மேக்கில் சல்மான் கான்
ADDED : 374 days ago
2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த படம் 'தெறி'. தமிழில் வரவேற்பை பெற்ற படம் தற்போது ஹிந்தியில் ரீ-மேக் ஆகி வருகிறது. அட்லி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு 'பேபி ஜான்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோரும் நடித்துள்ளனர். காளீஸ் இப்படத்தை இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு ரோலில் நடிகர் சல்மான் கான் வருகிறாராம். இதற்கான படப்பிடிப்பு வருகின்ற நாட்களில் நடைபெறும் என்கிறார்கள். அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான்கான் நடிக்க போகிறார். அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் அவர் நடிப்பதாக சொல்கிறார்கள்.