உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பா.விஜய் இயக்கத்தில் ஜீவா- அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா'

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா- அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா'


பாடலாசிரியர் பா.விஜய் 'ஸ்ட்ராபெர்ரி, ஆருத்ரா' போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது 'அகத்தியா' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார். சஸ்பென்ஸ் மர்ம காட்சிகள் நிறைந்த வரலாற்று கதையில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது குறித்த தகவலை படநிறுவனம் ஒரு போஸ்டர் உடன் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !