குட் நியூஸ் சொன்ன க்யூட் ஜோடி
ADDED : 363 days ago
மகராசி உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர் நிவேதிதா. இவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு சக நடிகரான சுரேந்தர் என்பவரை காதலித்து வந்த நிவேதிதாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் அண்மையில் தான் திருமணம் முடிந்தது. இந்நிலையில், நிவேதிதா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நிவேதிதா - சுரேந்தர் இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.