பெருமாள் முருகனின் சிறுகதை சினிமா ஆனது
ADDED : 409 days ago
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன். இவர் எழுதிய 'கோடித்துணி' என்ற சிறுகதை 'அங்கம்மாள்' என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும், பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகம்மது மக்பூல் மன்சூர் இசை அமைத்துள்ளார். கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.