உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்திக்கு செல்லும் மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வின்!

ஹிந்திக்கு செல்லும் மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வின்!


நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய 'குரங்கு பொம்மை' என்ற படத்திற்கு டயலாக் எழுதிய மடோன் அஸ்வின், அதன் பிறகு கடந்த 2021ம் ஆண்டு யோகி பாபு நடிப்பில் 'மண்டேலா' என்ற படத்தில் இயக்குனரானார். பின்னர் 2023ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் அடுத்தபடியாக ஹிந்தியில் கரண் ஜோகர் தயாரிக்கும் ஒரு படத்தை மடோன் அஸ்வின் இயக்கப் போகிறார். தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !