ரூ.450 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' படம்!
ADDED : 372 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இந்த படத்திற்கு விமர்சனங்கள் முன்ன பின்ன இருந்தாலும் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வசூலில் சக்கப் போடு போடுகிறது.
ஏற்கனவே இப்படம் வசூல் ரீதியாக விஜய் நடித்து வெளிவந்த லியோ படத்திற்கு அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் உலகளவில் ரூ.455 கோடி வசூலித்துள்ளதாக நான்கு வாரங்கள் கடந்த நிலையில் இன்று அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் கேரளா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.