நாளை வெளியாகும் 'நேசிப்பாயா' படத்தின் முதல் பாடல்!
ADDED : 420 days ago
மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல், ஸ்பெயின், பெங்களூரு மற்றும் சென்னையில் நடந்தது.
இப்போது யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்திலிருந்து 'தொலைஞ்ச மனசு' என்கிற முதல் பாடல் வருகின்ற அக்டோபர் 11ம் தேதி (நாளை) வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.